சிகாகோ: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அமெரிக்காவில் பல பொது நிகழ்வுகள் ரத்துசெய்யப்பட்டு வருவதையும், பாதிக்கப்பட்டவர்கள் பிறரிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதையும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வரவேற்றுள்ளார்.

கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்காவையும் ஆட்டிப்படைக்க துவங்கியுள்ளது. அங்கேயும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

யூஎஸ் என்பிஏ சீசன் நிகழ்வு ரத்துசெய்யப்பட்ட பிறகான சமயத்தில், அதிபர் ஒபாமாவின் கருத்து வெளிவந்துள்ளது.

பொது நிகழ்வுகளை ரத்துசெய்தல் மற்றும் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது பற்றியும் அவர் பேசினார்.

ஒபாமா வெளிப்படுத்தியது போன்ற கருத்தை, வேறுசில பிரபலங்களும் வெளிப்படுத்தியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் இதே கருத்தை ஆதரித்துள்ளனர்.