மாட்ரிட்
ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ஸ்பெயின் அரசிக்கும் இந்நோய்த் தொற்றைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் அரசி லெட்டிசியா, சமத்துவத்துறை அமைச்சர் ஐரின் மோன்டெரோவுடன் பொதுநிகழ்சி ஒன்றில் பங்கேற்றார். அங்கு இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும் ஸ்பெயின் மரபுப்படி ஒருவருக்கொருவர் கன்னத்தில் முத்தமிட்டும் மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் அமைச்சர் ஐரினுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அரசி உள்ளிட்ட அரச குடும்பத்தினருக்கு கொரோனா மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரும் திங்களன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது… இது உலக அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை ஸ்பெயினில் 76,000 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 80 சதவீதம் உயிரிழப்பு ஏற்படுவது கவலையளிப்பதாக உள்ளது. எனவே பள்ளி மற்றும் கல்லூரிகள் திங்கள் முதல் இம்மாதம் வரை மூடப்படுவதோடு அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. அரசி மற்றும் அமைச்சர் இருவரும் இறுதியாக பாலியல் தொழிலாளிகளுக்கான மறுவாழ்வு நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.