மெல்போர்ன்: மகளிர் டி 20 உலக கோப்பை பைனலில், பார்வையாளர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருந்த விவரம் இப்போது தெரிய வந்துள்ளது.

அண்மையில், மெல்போர்னில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மோதிக் கொண்ட மகளிர் டி 20 இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்த தோற்றது.

இந் நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் நிர்வாகம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கிரிக்கெட் போட்டியை பார்வையிட வந்த ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற தகவலை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை எம்சிஜியில் நடந்த ஐசிசி மகளிர் டி 20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் இப்போது கோவிட் -19 என வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

எனவே அரங்கத்தில் அவரை சுற்றி உட்கார்ந்திருந்தவர்கள் அதிகபட்ச சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். தங்கள் வழக்கமான அலுவல்களை தொடர வேண்டும், அதே நேரத்தில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் ஒரு மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோய் என்று அறிவித்தது, குறிப்பிடத்தக்கது.