நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை’’ என்கிற பாடல் இயக்குநர் ஷங்கரின் சினிமா வாழ்க்கையில் –பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிரொலித்துள்ளது.

’இந்தியன் -2’ வை இந்நேரம் ரிலீஸ் செய்து விட்டு அடுத்த படத்துக்கு அவர் இப்போது சென்றிருக்க வேண்டும்.

கமலின் ‘தாத்தா’ மேக்கப்பில் திருப்தி இன்மை, கமலுக்கு காலில் நிகழ்ந்த அறுவை சிகிச்சை, அவரது பிக்பாஸ் ஷூட்டிங், அரசியல் மீட்டிங் போன்ற குறுக்கீடுகளுக்கு பிறகு படப்பிடிப்புக்கு போனால்-

3 பேரை பலி கொண்ட விபத்தினால் ஷுட்டிங் நிறுத்தப்பட்டு விட்டது.( தற்காலிகமாகவா? நிரந்தரமாகவா என்பது தெரியவில்லை)
ஷங்கரின் ‘பிளாஷ்பேக்’ நிகழ்வுகளும் கூட அவர் நினைத்த மாதிரி (சினிமாவில்) நடந்தேறவில்லை.

அவற்றில் சில துளிகள்.

’ஜெண்டில்மேன்’ படத்தில் சரத்குமாரை ஹீரோவாக நடிக்க வைக்கவே விரும்பினார். அழைப்பிதழும் கூட ரெடி.
ஆனால் சரத்குமார், ‘ஐ லவ் இந்தியா ‘படத்துக்கு ஒட்டுமொத்தமாக ‘கால்ஷீட்’ அளித்து இருந்ததால் ‘ஜெண்டில்மேனு’க்கு தேதிகளை ஒதுக்க முடியாத சூழல். பிறகே அர்ஜுன், ’ஜெண்டில்மேன்’ஆனார்.
அடுத்த படத்தின் கதையும் அதுதான்.
‘காதலன்’ படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க வைக்க விரும்பியது, பிரஷாந்தை.
புது இயக்குநர் என்று பிரஷாந்த் தயக்கம் காட்டியதால், (ஷங்கர் கால்ஷீட் கேட்டபோது ஜெண்டில்மேன் ரிலீஸ் ஆகவில்லை), பிரபுதேவாவை வேறு வழியின்றி, ’காதலன் பிரபு’ வாக நடிக்க வைத்தார்.

அவர் சொந்தமாக எடுத்த முதல் படம்- முதல்வன்.

ரஜினிகாந்தை ஹீரோவாக மனதில் வைத்தே அந்த கதையை உருவாக்கி இருந்தார். அப்போது இருந்த அரசியல் நிலவரங்களால் , அந்த படத்தை நிராகரித்தார், ரஜினி.

இரண்டாவது முறையாகவும் தற்செயலாக அர்ஜுன், ஷங்கர் படத்தில் நுழைய நேரிட்டது இப்படித்தான்.
அதுபோல் தான் ‘ரோபோ’’வும்.

இது, கமலஹாசனுக்கு பின்னப்பட்ட கதை. படத்தின் பெயர், ஹீரோ, தயாரிப்பாளர் என பல விஷயங்கள் அடுத்தடுத்த கட்டங்களில் ,உருமாறி- ;எந்திரன்’’ ஆக ’ரோபோ’வை ஷங்கர் வடிவமைத்து, அதில் ஹீரோவாக ரஜினியை நடிக்க வைத்தது எல்லாமே விபத்து என்றே சொல்ல வேண்டும்.

‘ஜீன்ஸ்’ கூட விஜய்க்கு உருவாக்கப்பட்ட கதை என்று கூறுவார்கள்.

இதெல்லாம் வெளியே தெரிந்த உண்மைகள்.

ஷங்கர் இயக்கி வெளிவந்துள்ள பிற படங்களில் அவர், யாரை ஹீரோவாக முதலில் தேர்ந்தெடுத்திருந்தார் என்பதை அவரே சொன்னால் தான் உண்டு.

-ஏழுமலை வெங்கடேசன்

[youtube-feed feed=1]