ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், விசாகனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி இரண்டாம் திருமணம் நடந்தது .சவுந்தர்யாவுக்கு முதல் திருமணம் மூலம் வேத் என்கிற மகன் உள்ளார்.
இந்நிலையில் சவுந்தர்யா தனது முதல் திருமண நாளை கணவருடன் சேர்ந்து காதல் நகரமான பாரீஸில் கொண்டாடியுள்ளார்.
காதலர் தினமான இன்று ஈபிள் டவர் முன்பு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தன் வாழ்க்கை நல்லபடியாக செல்வதற்காக நன்றியுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது .