2015–16 ம் வருசத்துக்கான தேசிய குடும்ப நலக்கணக்கெடுப்பின் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டிருக்கு. இதில் முதல் கட்டமா, 14 மாநிலங்கள் குறித்த தகவலை சொல்லியிருக்காங்க.
தமிழ்நாட்டுல மது குடிக்கறவங்களும், மது விற்பனை அளவும் ரொம்பவே அதிகரிச்சிருக்காம். 15 முதல் 49 வயது வரை உள்ள ஆண்களில் 46.70 சதவிகிதம் பேர் குடிப்பழக்கத்துக்கு அடிமையா இருக்காங்களாம். கிட்டதட்ட பாதி பேர்!
2005–06 ஆம் வருச கணக்கெடுப்பில, இது 41.50 சதவிகிதமாக இருந்துச்சாம். இந்த பத்து வருசத்துல 5.20 சதவீதம் அதிகரிச்சிருக்காம்.
15 முதல் 49 வயசுல இருக்கிற பெண்கள்ட்டயும் மதுப்பழக்கம் குறிப்பிடத்தக்க அளவில உயர்ந்திருக்காம். 2005–06 ம் வருசம், 0.10 விழுக்காடு பெண்கள் மதுவுக்கு அடிமையாகி இருந்தாங்க. இப்போ இது 0.40 விழுக்காடாக அதிகரிச்சிருக்கு.
இதில் ஒரே ஒரு விசயத்தில ஆறுதல் பட்டுக்கலாம். இப்ப முடிவு வெளியிடப்பட்டிருக்கிற 14 மாநிலங்கள்ல குடிக்கிற விசயத்துல தமிழகம் நாலாவது இடத்துல இருக்கு.
அதே நேரம் பயமாவும் இருக்கு. “இவ்ளோ ட்ரை பண்ணியும் நாலாவது இடம்தானா”னு கொதிச்சி போயி, நடமாடும் டாஸ்மாக் கொண்டு வந்திரப்போறாங்க!