டெல்லி: ஜப்பான் கப்பலில் உள்ள இந்தியர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறி இருக்கிறார்.
சீனாவையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ், உலகளவில் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் பல ஆயிரக்கணக்கானோர் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந் நிலையில், கொரானா வைரஸ் பீதி காரணமாக சீனாவுக்கு சென்று திரும்பிய டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் இருக்கும் 3700 பேரும் கொரோனா பாதிப்பு இருக்கும் என்று எண்ணி ஜப்பான் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
யோகோஹமா பகுதியில் கடந்த 4ம் தேதி முதல் அந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருப்போர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த பரிசோதனையில் மேலும் 44 பேருக்கு கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சர் கட்சுநுபு கடோ தெரிவித்துள்ளார். 44 பேரும் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவலை ஜப்பான் அமைச்சர் வெளியிடவில்லை.
ஜப்பான் கப்பலில் உள்ள இந்தியர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் இருக்கிறதா, இல்லையா என்று இன்றுவரை 2,51,447 விமான நிலைய பயணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
12 பெரிய மற்றும் 65 சிறு துறைமுகங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஜப்பான் கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த கப்பலில் உள்ள 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றார்.