சென்னை:
எடப்பாடி அரசின் நிர்வாகக் திறமையின்மை மற்றும் நிர்வாக கோளாறுகளால் தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 23,500 கோடியாக உயர்ந்து உள்ளது, கடனுக்கான வட்டி செலுத்தவே அரசின் வருமானம் சென்று விட்டால், மக்கள் நலத் திட்டங்களுக்கு பணம் இருக்காது என்று தமிழக அரசு குறித்து திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விமர்சித்து உள்ளார்.
தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது, எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசினால் தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.23,500 கோடியாக உயர்ந்துள்ளது. உற்பத்தி வளர்ச்சியில் 50% வீழ்ச்சியடைந்துள்ளது என்றவர், கடந்த 9 ஆண்டுகளில் கடன் 4 மடங்கு அதிகரித்திருக்கிறது என்றார்.
தற்போதைய நிலையில், மாநில அரசின் வருமானம் கடனுக்கான வட்டி செலுத்தவே சென்றுவிட்டால் மக்கள் நலத் திட்டங்களுக்கு பணம் இருக்காது என்று குறிப்பிட்டவர், தமிழகத்தின் நிதி சூழல் கர்நாடகா, கேரளாவைப் போல அன்றி, பீகார், உத்திர பிரதேசம் போல ஆகிக்கொண்டிருப்பதாக நிதி ஆணைய தகவல்கள் தெரிவிக்கின் றன” எனத் தெரிவித்துள்ளார்.