கடந்த வாரம் மும்பையில் எழுத்தாளர் சத்யார்த் நாயக் எழுதிய ”தி எடர்னல் ஸ்கிரீன் காடஸ்” நூல் வெளியிடப்பட்டது. பாலிவுட்டில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
எனக்குப் பிடித்த திரைக்கலைஞர் ஸ்ரீதேவி பற்றி நல்ல புத்தகம் இல்லையே என்று கவலைப்பட்டேன். அதுதான் அசல் திட்டம். 2017 ஆம் ஆண்டில், பென்குயின் ரேண்டம் ஹவுஸ் அனுமதி கிடைத்தது,
சினிமாவில் (மகள்) ஜான்வியின் அறிமுகம் பற்றி பேச டைம் கேட்டேன் , நாம் புத்தகம் குறித்து ரிலாக்ஸாக பேசலாம் என்றார். ஆனால் அது நடக்கவில்லை. அவர் 2018 பிப்ரவரி 24 ல் அவரது மரணம் நிகழ்ந்தது.
ஸ்ரீதேவியின் மரணம் என்னை மிகவும் பாதித்ததால் இனி என்னால் புத்தகம் எழுத முடியாது என்று நானே சொல்லிவிட்டேன். இந்த அதிர்ச்சியான சம்பவத்துக்குப் பிறகு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் பென்குயின் பதிப்பகத்தாரும் இப்பணியை செய்துமுடிக்க என்னை ஊக்குவித்தனர், இந்நூலுக்காக ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 70 நடிகர்களை நேர்காணல் செய்து அவர்களிடமிருந்து விஷயங்களைப் பெற்றேன் என்று அதன் ஆசிரியர் கூறினார் .