
“நிரந்தர நண்பனும் இல்லை.. பகைவனும் இல்லை..” என்பது அரசியலுக்கு மட்டுமல்ல.. சினிமாவுக்கும் பொருந்தும்.
லிங்குசாமி தயாரிக்க, கமல் நடிப்பில் உருவான உத்தம வில்லன், படுதோல்வி அடைந்தது. இதனால் லிங்குசாமி கடன் தொல்லையில் சிக்கினார். இந்த சமயத்தில், கமலுக்கும், லிங்குசாமிக்கும் இடையே மனக்கசப்பு நிலவுவதாகவும் செய்திகள் அடிபட்டன. இதை உண்மையாக்கும் விதத்தில், ஒரு சினிமா விழாவில், “சினி இன்டஸ்ட்ரியில் உத்தமன் போல் நடிக்கும் வில்லன்கள் நிறையபேர் உண்டு. ஏமாந்துவிடாதீர்கள்..” என்று லிங்கு சாமி பேச… அவர் கமலை குறிவைத்துத்தான் பேசுகிறார் என்ற பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், லிங்கு சாமி தயாரித்த இன்னொரு படமான ரஜினி முருகன் கடந்த பொங்கல் அன்று ரிலீஸ் ஆகி வெற்றிநடை போடுகிறது. அதில் வரும் லாபத்தை வைத்து, மீண்டும் கமலை ஹீரோவாக்கி படம் எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் லிங்குசாமி. கமலிடம் பேசி ஒப்புதலும் பெற்றுவிட்டாராம்.
இந்த செய்தியின் முதல் வரியை படிங்க..!
Patrikai.com official YouTube Channel