ஐதராபாத்:

லக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட  12 பேர் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது…

சீனாவின் வுகான்  நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது.  இந்த வைரஸ் பரவுவதை தடுக்க சரியான  மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், உலக நாடுகளில் இருந்து சீனா தனிமைப் படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  சீனாவில் இருந்து வந்துள்ள பயணிகளை பல்வேறுகட்ட சோதனைகளை செய்து, நாட்டுக்குள் அனுப்பி வருகிறது தமிழக அரசு. அப்படியிருந்தும் கேரளாவில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,   ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து, பணி நிமித்தமாக சீனா சென்று, தாயகம் திரும்பிய நூற்றுக்கும் மேற்பட்டோர்  அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களிடம் நடத்திய சோதனையில்,  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 12 பேருக்கு நோய் தொற்று இருப்பதற்கான அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனை யில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.