ண்டன்

ங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அனைத்து பேருந்துகளையும் மின்சார மயமாக்க 5 கோடி பவுண்ட் செலவில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கும் பல நாடுகளில் சுற்றுச் சூழல் மாசடைவதற்கு முக்கிய காரணம் வாகனங்கள் ஆகும்.  இதைக் குறைக்க அனைத்து நாடுகளும் பல கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.  அவ்வகையில் இங்கிலாந்து நாட்டில் கடும் மாசு காரணமாகக் கடந்த பத்தாண்டுகளில் 3000 வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் போக்குவரத்துக்கு கடும் இடையூறு உண்டானது.   மாசு உண்டாவதைத் தவிர்க்கப் பேருந்துகளை மின்சார மயமாக அரசு திட்டமிட்டது.   இதையொட்டி முதல் கட்டமாகத் தலைநகர் லண்டனில்  அனைத்து பேருந்துகளையும் மின்சார மயமாக்க ரூ. 5 கோடி செலவில் திட்டம் ஒன்றை அரசு அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து அரசின் போக்குவரத்து செயலர் ஷாப்ஸ். “இங்கிலாந்தில் மாசுக் கட்டுப்பாடு காரணமாகப் பல தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.  இதனால் அதிக அளவில் கார்கள் அந்த தடங்களில் ஓடுகின்றன.   லண்டனில் ஓடும் கார்கள் முழுவதும் டீசலில் ஓடுகின்றன.   இதனால்  நகரில் மாசு உற்பத்தி கட்டுக்கடங்காமல் உள்ளது.

சுமார் 200 மின்சார பேருந்துகளைக் கொண்டு 3700 டிசல் கார்கள் பயன்பாட்டை நிறுத்த முடியும்.   இதன் மூலம் வாகன மாசு வெகுவாக குறையும்.  மாசுக் கட்டுப்பாட்டுக்காக  அரசு 17 கோடி பவுண்ட் ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் 5 கோடி பவுண்ட் மூலம் லண்டன் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளும் மின்சார மயம் ஆகிறது.   இதன் மூலம் லண்டன் நகர் மின்சார பேருந்துகள் மட்டுமே உள்ள நகராக மாற உள்ளது. ” எனத் தெரிவித்துள்ளார்.