In a series of firsts, happy to announce that I’m entering the fascinating world of content creation with @deepak30000,@banijayasia & @turmericmediaTM #RMahendran.I've always believed in telling stories & this is just another step to get the best stories to the biggest audiences!
— Kamal Haasan (@ikamalhaasan) February 4, 2020
வெப் சீரிஸ் மற்றும் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிறுவனம் பனிஜாய் ஏஷியா. இந்நிறுவனம், டர்மரிக் மீடியா என்ற நிறுவனத்துடன் இணைந்து பிராந்திய மொழிகளில் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான நிகழ்ச்சிகளை உருவாக்க உள்ளது. ‘ஹாஸ்டேஜஸ்’, ‘ரோர் ஆஃப் தி லயன்’, ‘நச் பலியே’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இவர்களுடன் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார். விரைவில் இந்தக் குழுவுடன் அவர் தயாரிக்க உள்ள வெப் சீரிஸ் பற்றிய அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பற்றி கமல்ஹாசன், “எடுத்து வரும் முதல் முயற்சிகளில் ஒன்றாக, பனிஜாய் ஏஷியா மற்றும் டர்மரிக் மீடியாவுடன் இணைந்து, நிகழ்ச்சி உருவாக்கும் அற்புதமான உலகத்துக்குள் நுழைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. கதை சொல்வதில் என்றும் நம்பிக்கையுடையவன் நான். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்கு மிகச்சிறந்த கதைகளை எடுத்துச் செல்வதில் இது அடுத்த அடி” என்று குறிப்பிட்டுள்ளார்.