திருச்சூர்:

கேரளா மாநிலம்  திருச்சூர் அருகே உள்ள குடியிருப்பு ஒன்றில்உ ள்ள குடிநீர் குழாயில் கடுமையான துர்நாற்றத்துடன் ஆல்ஹகால் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனே அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை  மாலை  திருச்சூர் மாவட்டம் சாலக்குடி பகுதியில்உள்ள கேஎஸ்ஆர்டிசி பகுதியில் உள்ளவர்கள் மதுவில் உள்ள ஆல்ஹகால் வாசனை வெளியாவதை உணர்ந்துள்ளனர்.  இந்த நிலையில், அடுத்த நாள் அந்த பகுதியில்  அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடிநீர் குழாயில் கடுமையான துர்நாற்றத்துடன் ஆல்ஹகால் வந்துள்ளது. இதை கண்ட குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நீரை சுவைத்து பார்த்தபோது, மதுவைப் போல இருந்ததாகவும், மதுவாடை வீசுவதாகவும், கலால்துறைக்கு புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கலால்துறை அதிகாரிகள், அருகே இருந்த மதுபான பாரில் இருந்து வெளியாகும் கழிவுநீர் குடிநீரில் கலந்திருப்பதை உறுதி செய்தனர். 18 குடும்பங்கள் குடியிருக்கும் அந்த  குடியிருப்பு பகுதியில் உள்ள திறந்த வெளி கிணற்றுக்குள், பாரில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கலந்து, கிணற்று நீரை கெடுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, அதிகாரிகள் அந்த குடியிருப்புவாசிகளுக்கு டேங்கர் மூலம் சுத்தமான நீர் வரவழைத்து வழகினார். தற்போது அங்கு தனி தண்ணீர் தொடங்கி அமைக்கப்பட்டு நகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.