விஜயவாடா

ந்திர அரசு விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலக கட்டிடம் அமைக்க ரூ.19.73 கோடி நிtஒதி துக்கீடு செய்துள்ளது.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த போது ஐதராபாத் நகரம் தெலுங்கானா மாநில தலைநகர் ஆனது.   பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் முதலாம் முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதி நகரை தலைநகராக அறிவித்தார். நடந்து முடிந்த தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார்.   வெற்றி பெற்ற ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராகப் பதவி ஏற்றார்.

ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியை தலைநகராக ஆக்க மறுப்பு தெரிவித்தார்.  அதையொட்டி அமரவாடி பகுதியில் தலைநகர் அமைய நிலம் வழங்கிய விவசாயிகள் கடந்த 50 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.    இதற்கிடையே ஆந்திர மாநில அரசு விசாகபட்டினம் நிர்வாக தலைநகராகவும் அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும் கர்நூல் நீதிமன்ற தலைநக்ராவும் விலக்கும் என அறிவித்தது.

இந்த மூன்று தலைநகர் குறித்த பிரச்சினைக்குத் தீர்வுகாணச் சட்ட மேலவையில் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.   இந்நிலையில் ஆந்திர மாநில ரசு சட்டமேலவையை கலைத்து மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது.   இந்த குழப்பத்துக்கு இடையே மாநில அரசு விசாகப்பட்டினம் மதுராவாடாவில் கட்டிடம் அமைக்க ரூ. 19.73 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.