Here is the title reveal of the movie #Ayalaan@siva_kartikeyan@Ravikumar_Dir @24AMStudios@kjr_studios#அயலான் pic.twitter.com/wNqVsR0BfP
— A.R.Rahman (@arrahman) February 3, 2020
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு ‘அயலான்’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் இன்று வெளியிட்டுள்ளார்.மேலும், இந்தத் தலைப்புக்குக் கீழே ‘Destination Earth’ என்று குறிப்பிட்டுள்ளது படக்குழு.
சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு என பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தைத் தயாரித்து வந்த 24 ஏ.எம். நிறுவனத்துடன் இப்போது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் கை கோத்துள்ளது.