கொழும்பு:

லங்கையில் இனிமேல், சுதந்திரத் தின விழாவில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட மாட்டாது, சிங்கத்தில் மட்டுமே  தேசிய கீதம்  பாடப்படும் என்று கோத்தபய தலைமையிலான இலங்கை அரசு அறிவித்து உள்ளது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சிக்கு தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்று பகிரங்கமாக அதிபர் கோத்தபய குற்றம் சாட்டிய நிலையில், தற்போது தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இலங்கையின் அரசியல் அமைப்பில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது அதன்படி,  இலங்கையின் 2022-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என்று இலங்கை அரசு  அறிவித்து உள்ளது.

பல ஆண்டுகளாக இலங்கையின்  தேசிய கீதம் தமிழ் மொழியிலும், சிங்கள மொழியிலும் பாடப்பட்டு வந்த நிலையில் திடீரென்று சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது தமிழா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தேர்தலில்,  கோத்தபய ராஜபக்சவின் சிங்களர்கள்  கட்சி ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிபராக பதவி ஏற்ற கோத்தபய ராஜபக்சே, தங்களது கட்சிக்கு தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், தமிழில் தேசிய கீதம் பாடுவது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் மணிந்தா சமரசிங்கே, “இலங்கையில் இனிமேல் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும். ஆனால், பிராந்திய அளவில் தமிழ் மொழியில் பாட அனுமதிக்கப்படும்” என கூறினார்.