டில்லி
ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக பகுதியில் நேற்று மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கடும் போராட்டம் நடந்து வருகிறது.
டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் இவற்றை எதிர்த்துத் தொடர் போராட்டங்கள் நிகழ்த்தி வருகின்றனர்.
நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வாயிலில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
இதுவரை ஒரே வாரத்தில் இந்த பகுதியில் மூன்று முறை துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel