டில்லி

ந்த வருடத்துக்கான நிதி நிலை அறிக்கையில் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏதும் இல்லை எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நேற்று 2020-21 க்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.  இந்த அறிக்கையை பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழில் துறையினர் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  பொதுமக்களில் இடையிலும் அதிருப்தி பரவி உள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப சிதம்பரம் இது குறித்து, செய்தியாளர்களிடம் ” பிரதமர் மோடி தலைமை வகிக்கும் மத்திய அரசு, பொருளாதாரத்தை முற்றிலும் கைவிட்டுவிட்டதை உணர்த்துவதைப் போலவே இன்றைய நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.    இதில் முக்கியமான நிதி பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் எதுவும் இடம் பெறவில்லை.

மத்திய அரசு எடுத்துள்ள எல்ஐசியின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவு விவாதத்துக்குரியது. வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கும் சுரங்கங்கள், கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் குறித்த எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கும்படி உள்ளது.

தொடர்ந்து ஆறாவது காலாண்டாக நாட்டின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது.  ஆயினும் மத்திய அரசு பொருளாதாரம் அதல பாதாளத்திற்குள் சிக்கி மிகப்பெரிய சவாலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறது.

தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆதிச்சநல்லூர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். இருப்பினும்,  ஆயினும் கீழடி என்பது, திராவிட நாகரிகத்தை அதிகாரப்பூர்வமாக எடுத்துக் காட்டிய ஒரு பகுதி  ஆகும்.  அத்துடன்  சிந்து சமவெளி நாகரீகத்தைப் போலவே திராவிடர் நாகரிகம் கீழடியில் கண்டெடுக்கப்பட்டது. இதற்கான, நிறைய ஆதாரம் மற்றும், பொருட்கள் அங்கே கிடைத்துள்ளன.    ஆயினும் கீழடி குறித்து நிதிநிலை அறிக்கையில் சொல்லப்படவில்லை

இந்த அறிக்கையில் கடந்த ஐந்து வருடங்களில் புதிய நிறுவனங்கள் தொடங்கும் விகிதம் 12.2 சதவீதமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்கள்.   அவர்கள் எந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை,   நானும் நாடு முழுக்க சுற்றி வந்துள்ளேன்.   எனக்குப் பல நிறுவனங்கள் மூடப்படுவதாகத்தான் தகவல் வருகிறது.

நாட்டில் சுரங்கம், கட்டுமானம் மற்றும் உற்பத்தி ஆகிய மூன்று துறைகள்தான் வேலை வாய்ப்பை அதிகரிக்கக் கூடியவை. இருப்பினும் இந்த அறிக்கையில் இந்த துறைகளுக்கு எவ்வித முன்னுரிமையும் கொடுக்கப்படவில்லை.

மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கைக்கு, பத்துக்கு ஒரு மதிப்பெண் மட்டும் தான் தர முடியும்: என்று கூறியுள்ளார்.