லண்டன்: பல்வேறு நடைமுறைகளுக்குப் பிறகு, ஐரோப்பிய யூனியனிலிருந்து ஒருவழியாக விலகியது பிரிட்டன்.
இந்த விலகல், நேற்று நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்கு, கடந்த 2016ம் ஆண்டே பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது விலகலாம் என்று பெரும்பான்மையான மக்கள் ஓட்டளித்த பின்னரும், பல்வேறான நடைமுறை சிக்கல்கள் நிலவின.

இடையில், ‍டேவிட் கேமரூன் மற்றும் தெரசா மே போன்ற பிரிட்டன் பிரதமர்கள் பதவியும் விலகினர். ஆனால், புதிய பிரதமராக போரிஸ் ஜான்ஸன் பதவியேற்ற பின்னர், அந்த நடைமுறை வெற்றிகரமாக சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கான முழு நடைமுறைகள் முடிய இன்னும் 11 மாதங்கள் ஆகும். ஐரோப்பிய யூனியனில் உள்ள 73 பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை இழப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம், பிரிட்டன் விலகியதற்க, ஸ்காட்லாந்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இந்த விலகலை பிரிட்டன் மக்கள் கொண்டாடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் வரலாற்றில் இதுவொரு முக்கியமான நிகழ்வு என்று தெரிவித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர்.