நியூயார்க்: தொழில் நுட்பத்துறை நிறுவனமான ஐ.பி.எம் இன் பொதுமுகம் மாறப்போகிறது. ஐபிஎம் இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த வர்ஜீனியா ரோமெட்டியை அடுத்து அரவிந்த் கிருஷ்ணா அந்தப் பொறுப்பை வகிக்கப் போகிறார்.

கடந்த 2012 ம் ஆண்டு முதல் தலைமை நிர்வாகியாக இருந்து நிறுவனத்தின் பொருளாதார வீழ்ச்சியின் போது வழிநடத்திய ரோமெட்டி, வருட இறுதியில் வரும் தனது ஓய்வுக்காலத்திற்கு முன்னரே அப்பதவியிலிருந்து விலகி, நிர்வாகத் தலைவராக இருப்பதற்காக முடிவு செய்தார். மிகவும் பிரபலமானவராக விளங்கிய ரோமெட்டியுடன் ஒப்பிடும்போது, ஐபிஎம் இன் கிளவுட் மற்றும் கானிட்டிவ் மென்பொருளுக்கான மூத்த துணைத் தலைவராக இருக்கும் கிருஷ்ணா, தொழில் நுட்பத்துறையில் மிகவும் குறைவாகவே அறியப்படுகிறார்.

ஆனால், நிறுவனத்தின் நிர்வாகியாக நீண்ட காலம் பணிபுரிந்து, தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு அறிவு இரண்டையும் எடுத்து வருகிறார் என்றும், “ஐபிஎம் இல் அடுத்த சகாப்தத்திற்கு பொருத்தமான நிர்வாக அதிகாரி“, என்று ரோமெட்டி கூறினார்.

ஐபிஎம் இன் புதிய தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்:

கிருஷ்ணா, ஐபிஎம் இன் மூத்த நிர்வாகியாக கிட்டத்தட்ட  முப்பதாண்டுகளாக பணிபுரிந்திருக்கிறார்.  அவர் 1990 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தில் சேர்ந்தார். அந்த ஆண்டில் தான் அவர் தன்னுடைய பி.எச். டி படிப்பையும் முடித்தார். அவரது தொழில் ரீதியான வாழ்க்கை முழுவதுமே அவர் ஐபிஎம் இல் தான் கழித்திருக்கிறார். அவர் கடந்த பத்து வருடங்களில் அங்கு வகித்த பல்வேறு பொறுப்புகள், வாட்ஸன் ஆராய்ச்சிக் குழுவில் பணிபுரிந்த்திலிருந்து பொது மேலாளரானது பின்னர், பல்வேறு வணிகங்களின் துணைத் தலைவராக விளங்கியது என அவரது சுய விவரக் குறிப்பு காட்டுகிறது.

கிருஷ்ணா, மிகவும் நேரடியாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் சிந்தித்து செயல்படுகிறார் என்று ஐபிஎம் வாரியத்தின் நிர்வாக இழப்பீடு மற்றும் மேலாண்மை வளக் குழுவின் தலைவர், அலெக்ஸ் கோர்ஸ்கி, அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி வாரிசு அறிவிக்கும் செய்தி வெளியீட்டில் தெரிவித்தார்.

“ஐபிஎம் இல் வணிகங்களை நடத்தியதன் மூலம் பெறப்பட்ட தனது பலதரப்பட்ட அனுபவங்கள் மூலம், தைரியமான மாற்றங்கள் மற்றும் நிரூபிக்கப்பட்ட வணிக முடிவுகளின் மிகச் சிறந்த சாதனைப் பதிவை அரவிந்த் உருவாக்கியுள்ளார். அவர் ஒரு உண்மையான, மதிப்புகள் சார்ந்த தலைவர், என்று ரோமெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணாவின் மேற்பார்வையில் ஐபிஎம் கிளவுட் இயங்குதளம், ஐபிஎம் பாதுகாப்பு பிரிவு மற்றும் அறிவாற்றல் பயன்பாடுகள் வணிகம் ஆகியவை அடங்கும். செய்தி வெளியீட்டில், ரோமெட்டி, ஐபிஎம் இன் கிளவுட் மற்றும் கானிசன்ட் மென்பொருள் வணிகத்தின் வளர்ச்சியை கிருஷ்ணாவின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டார்.

கூடுதலாக, கிருஷ்ணா நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கூடமான ஐபிஎம் ஆராய்ச்சியை மேற்பார்வையிடுகிறார்.  இதில், ஐபிஎம் இன் வலைத்தளத்தைப் பொறுத்தமட்டில் ஆறு கண்டங்களில் 3000 ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்

பிஎச்.டி பட்டம் பெற்ற 57 வயதான கிருஷ்ணா, அர்பானா-சாம்பேனில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் மற்றும் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

நிறுவனத்தின் ரெட் ஹேட் கையகப்படுத்துதலின் “முதன்மை கட்டிடக் கலைஞர்” என்று கிருஷ்ணாவுக்கு ஐபிஎம் பெருமை அளிக்கிறது. திறந்த மூல மென்பொருள் விற்பனையாளரின் 34 பில்லியன் டாலர் கையகப்படுத்தல், இது கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்தது, ஐபிஎம் அதன் நீண்ட வரலாற்றில் இதுவரை நடந்த மிகப்பெரிய கையகப்படுத்தல் ஆகும்.

தொழில்நுட்ப அறிவைப் பெருமைப்படுத்துவதோடு, கிருஷ்ணா “ஒரு சிறந்த செயல்பாட்டுத் தலைவரும், நாளைய வணிகத்தை கட்டியெழுப்பும் அதே நேரத்தில் இன்றைய வெற்றியை அடையவும் முடியும்” என்று ரோமெட்டி ஐபிஎம் செய்தி வெளியீட்டில் தெரிவித்தார்.