பெய்ஜிங்: சீனாவில் 11 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தை பாதுகாப்பது அறிவியலுக்கு புதியது என்று உலக சுகாதார அமைப்பின் சீன பிரதிநிதி கவுடன் காலே கூறி இருக்கிறார்.
சீனாவில் பரவிய கொரோனா வைரசால் உலகமே இப்போது பெரும் மருத்துவ அறிவியல் சிக்கலில் உள்ளது. அந்த வைரசால் சீனா மட்டுமல்லாது, உலக நாடுகள் அனைத்தும் மெடிக்கல் எமர்ஜென்சி எனப்படும், மருத்துவ அவசரநிலை பிரகடனம் என்ற புள்ளியில் இணைந்திருக்கிறது.
சீனாவில் என்ன நடக்குகிறது என்ன என்பதை விரிவாக இந்த மருத்துவ உலகுக்கு சொல்லி இருக்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் சீன பிரதிநிதி கவுடன் காலே.
அவர் கூறி இருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாக நான் வசித்து வந்த வுஹான் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவுக்கு இல்லை. அவர்களின் நடவடிக்கை பயனுள்ளதாக இருக்குமா என்று தெளிவான பார்வை இல்லை.
இது ஒரு பொது சுகாதார நடவடிக்கையை அளவிடும் முயற்சிகள் பலன் அளிக்குமா, இல்லையா என்பதை எங்களால் கூற முடியாது. சுகாதாரத் துறை மேற்கொண்ட பரிசோதனைகளை எதிர் கொண்டவர்களில் நானும் ஒருவன். சிறந்த வலுவான சுகாதார நடவடிக்கைகளே அனைத்துக்கும் தீர்வு.
கடந்த 23ம் தேதி அதிகாலை 2 மணியளவில் உஹான் நகரம் மூடப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. அதே நாளில் காலை 10 மணி அளவில் பேருந்துகள் நிறுத்தப்படுகிறது, சுரங்கப்பாதைகள் மூடப்படுகின்றன. அனைத்து போக்குவரத்தும் முடக்கப்படுகிறது.
இதனால் எந்தவித பலன்களும் ஏற்பட போவதில்லை. மாறாக, அந்த வைரஸ் அண்டை நகரங்களுக்கும் பரவும். அடுத்த 2 நாட்களுக்குள் அதாவது 14 நகரங்களும் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டன.
35 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஹுவாங்காங், ஈஜோ ஆகிய நகரங்கள் உடனடியாக மூடப்பட்டன. சிபி, சியாண்டாவோ, ஜிஜியாங், கியாஞ்சியாங், சியானிங், ஹுவாங்ஷி, என்ஷி、டாங்கியாங், ஜிங்ஜோ, ஜிங்மென் மற்றும் சியோகன் ஆகிய நகரங்களும் இந்த நடவடிக்கைக்கு இலக்காகின.
எந்த நகரமும் இயல்பாக இல்லை, அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஹூபே மாகாணம் தனிமைப்படுத்தது பிரமிப்பாக இருக்கிறது. நியூயார்க் டைம்ஸ், வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் குறித்த நிபுணர் டாக்டர் வில்லியம் ஷாப்னர், சுகாதாரத் துறை இதற்கு முன்னதாக இது போன்றதொரு நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை. மிகவும் பிரமிப்பாக இருக்கிறது என்றார்.
முதலில், இந்த தொற்றுநோய் 40 நாட்களுக்கு மேலாக பரவ அனுமதிக்கப்பட்டதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மூடப்பட்ட எந்த நகரங்களும் மூடப்படுவதற்கு முன்னர் எந்த ஸ்திரமான சுகாதார நடவடிக்கையை எடுக்கவில்லை.
குறிப்பாக மாகாண மற்றும் நகர அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சிகளை பார்த்தால், அவை பெரும்பாலும் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் அல்ல, மாறாக நோயை பற்றிய தகவல்களைக் கட்டுப்படுத்துவதில் தான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறது.
இந்த சிக்கல்கள் அனைத்திற்கும் ஒரே காரணம் உஹானில் இருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் புதிய கொரோனா வைரஸ் ஆகும். ஜனவரி 24 வரை, ஹூபே மாகாணத்தில் மட்டும், 549 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் உண்மையாக பலி எண்ணிக்கை என்ன என்பது பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் அறியப்படவில்லை. சீன முன்னணி செய்தி நிறுவனங்களின் தகவல்கள் படி, அனைத்து முழுமையான நிலைமைகளும் டிசம்பர் 8ம் தேதி தொடங்கியது.
ஹுவானன் கடல் உணவு சந்தையில் கடை வைத்திருப்பவர் முதன்முதலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர். ஹுவானன் கடல் உணவு சந்தை ஒரு பெரிய சந்தையாகும். 7 கால்பந்து ஆடுகளங்கள் அளவு அதன் பரப்பளவு கொண்டது. 1,000 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் உள்ளன.
எனவே, இது தொற்று நோய் பரவுவதற்கான சிறந்த இடமாக அமைகிறது. பெயரில் மட்டுமே ஒரு கடல் உணவு சந்தையாகும். முள் எலிகள், பூனைகள், மயில்கள், மூங்கில் எலிகள் மற்றும் பிற வகை காட்டு விலங்குகள் உட்பட பல விலங்குகளை விற்பனை செய்கிறது என்று கூறி இருக்கிறார்.