க்னோ

டும் போராட்டம் நடந்தாலும் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   இந்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் இந்த சட்டத்துக்கு எதிரான தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன.  பல மாநிலங்களில் இது தொடர்பாக நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணி ஒன்று நடைபெற்றது.   அந்தப் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அப்போது அமித் ஷா, “குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தவறான கருத்துக்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருகின்றன.   இதனால் கலவரங்களும் வன்முறைகளும் நிகழ்ந்து வருகின்றன.

குறிப்பாகக் காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியைக் காப்பாற்ற வங்கதேச்ம், பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள மதம் சார்ந்த சிறுபான்மையினர் குடியுரிமை பெறுவதைத் தடை செய்கிறது.   இதையே சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின்  மாயாவதி ஆகியோரும் செய்து வருகின்றனர்

ஐயா  அகிலேஷ் அவர்களே, தாங்கள் இதுகுறித்து அதிகம் பேசாமல் இருப்பது நல்லது.  முதலில் இந்த சட்டம் குறித்துத் தெளிவாகப் படித்து புரிந்துக் கொண்டு பிறகு பேசுவது நல்லது.   அதன் பிறகு நீங்கள் மேடையில் இது குறித்து விவாதம் செய்யுங்கள்.

இதைப்போல் மாயாவதி, ராகுல் காந்தி, மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோருடனும் இந்த சட்டம் குறித்து விவாதம் நடத்த நான் தயாராக உள்ளேன்.

வங்கதேசம்,  பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கோடிக்கணக்கான சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர், அல்லது மதமாற்றம் செய்யப்பட்டனர், அல்லது அவர்கள் வீட்டுப்  பெண்களைக் கடத்த முற்பட்டனர் என்பதால் இந்தியாவுக்கு அவர்கள் ஓடி வந்துள்ளனர். இப்போது மனித உரிமை பற்றிப் பேசுபவர்கள் அப்போது இவர்களின் உரிமை பற்றி என்ன சொன்னார்கள்?

எதிர்க்கட்சி தலைவர்கள்  வாக்கு வங்கியின் மீது பேராசை கொள்வதுடன் இந்த மக்கள் தங்கி உள்ள முகாம்களுக்கு வந்து பார்க்க வேண்டும்.   சுமார் 100 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருந்தவர்கள் ஒரு குடிசையில் வாழ்ந்து பசியிலும் பட்டினியிலும் வாடி  பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர்.  அவர்களுக்கு வசிக்கச் சரியான வீடு, உணவு, உடை, வேலை, மருத்துவ உதவி எதுவும் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்பதை அப்போது தான் அரசியல் தலைவர்கள்  உணர்வார்கள்

மத்திய அரசுக்கு அவர்களுடைய உரிமைகளை அளிக்க வேண்டிய கடமை உள்ளது.   எனவே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் போராடட்டும்.   ஆனால் அந்த சட்டத்தைத் திரும்பப் பெறப்போவது இல்லை.  அச்சட்டம் தொடரும்” என உரையாற்றி உள்ளார்.