காத்மாண்டு:
கேரளாவைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 8 பேர் நேபாளத்தில் உள்ள ஓட்டல் அறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிகழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர்களது மரணத்துக்கான காரணம் தெரிய வந்துள்ளது.
அங்கு இரவு மைனஸ் 2 டிகிரிக்கும் குறைவான குளிர் வாட்டிய நிலையில், குழந்தைகள் அவஸ்தை பட்டு வந்ததை தடுக்க விடுதி நிர்வாகத்தினரிடம் கேட்டு வாங்கிய கேஸ் ஹீட்டரில் இருந்து வெளியான வாயு காரண மாக அவர்கள் இறந்துள்ளதாக உடற்கூறாய்வு அறிக்கை தெரிவித்து உள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழு விடுமுறையை கொண்டாட நேபாளம் சென்றிருந்தது. இந்தியாவுக்கு திரும்பிச் செல்வதற்காக அவர்கள் போகாராவுக்குச் சென்று கொண்டிருந்தனர். தற்போது அங்கு கடும்குளிர் நிலவி வரும் நிலையில், அங்கு மக்வான்பூர் மாவட்டத்தில் டாமன் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இந்த இடமானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 மீட்டர் உயரத்தில் உள்ள பகுதியாகும்
‘இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு ஒரு அறையில் இருந்த 4 குழந்தைகள் உள்பட 8 பேரும் மயக்க நிலையில் இருந்தது, அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை காலை விடுதி ஊழியர்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் 8பேரையும் இந்திய சுற்றுலா பயணிகள், விமானம் மூலம் காத்மாண்டு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்கள் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், சிலிண்டர் ஹீட்டர் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 பேரும் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அறையில் தங்கியிருந்தவர்கள், தங்களை சூடாக வைத்திருக்க, இரவு முழுவதும் கேஸ் ஹீட்டரை இயக்கிய நிலையில், அதில் இருந்து வெளியான வாயு, அவர்களுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தி மரணத்தை கொடுத்துள்ளது தெரிய வந்ததுள்ளது.
இதுகுறித்து கூறிய அந்த விடுதியின் மேலாளர், சுற்றுலா பயணிகளில் எட்டு பேர் ஒரே அறையில் தங்கி யிருந்தனர், மீதமுள்ளவர்கள் மற்றொரு அறையில் தங்கியிருந்தனர். ஒரு அறையில் தங்கியிருந்த 8 பேரும் பூட்டப்பட்ட அறையில் மயக்க நிலையில் காணப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து அனைவரையும் காத்மாண்டு மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு சென்று அவர்கள் பிழைக்க முயற்சி மேற்கொண்டோம் என்று தெரிவித்துஉள்ளார்.
உயிரிழந்தவர்களின் விவரத்தின் நேபாளத்தின் மக்வான்பூர் காவல் நிலையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹீட்டரில் இருந்து வெளியான வாயு காரணமாக மூச்சுத் திணறி அவர்கள் இறந்துள்ளதாக உடற்கூறாய்வு அறிக்கை தெரிவிப்பதாகவும், இறந்தவர்களின் பிரபின் குமார் நாயர் (39), சரண்யா (34), ரஞ்சித் குமார் டி.பி. (39), இந்து ரஞ்சித் (34), ஸ்ரீபத்ரா (9), அபிநவ் சூர்யா (9), அபி நாயர் (7) மற்றும் வைஷ்ணவ் ரஞ்சித்(2) ஆகிய 8 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டு பேர் ஆண்கள், இரண்டு பேர் பெண்கள், 4 பேர் சிறுவர்கள் என்றும் இதில் 2 பேர் ஆண்கள் 2பேர் பெண்கள் என்றும் தெரிவித்துள்ளது.
கேஸ் ஹீட்டரால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.