மதுரை:

மிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை  சீன பேராசிரியர் ஒருவர் அசத்தலாக ஓவியமாக வரைந்துள்ளார். இந்த ஓவியங்களைக்கொண்டு சீனாவில்  கண்காட்சி நடத்தப்போவதாக தெரிவித்துள்ளவர், வரும் 21ந்தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் ஓவியக் கண்காட்சியை நடத்துவதாக தெரிவித்து உள்ளார்.

சீனாவின்  சென்ஜோ- ஹுனான் மாகாணத்திலுள்ள புகழ்பெற்ற சியாங்கன் பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார் ஜாங் யுவே (Zhang yuwei). இவர் தற்போது மதுரை வருகை தந்துள்ளார். மதுரை பகுதிகளில் நடைபெற்று வரும் ம் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்து வரும் ஜாங் யுவே, அது தொடர்பாக வண்ண ஓவியங்களையும் வரைந்துள்ளார்.

சீன பேராசிரியர் ஜாங் யுவே உடன் காங்கிரஸ் தலைவர் இராம.சுகந்தன்

தான் வரைந்துள்ள ஜல்லிக்கட்டு  ஓவியங்களை சீனாவில் கண்காட்சி நடத்தப்போவதாக தெரிவித்துள்ள ஜாங் யுவே, வரும் 21ந்தேதி மதுரை காமராஜர் யுனிவர்சிட்டியிலும் கண்காட்சிக்கு வைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

ஜாங் யுவே-வை மதுரையில் சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவர்  வாழப்பாடி இரா.சுகந்தன், அவர் வரைந்துள்ள அசத்தலான ஓவியங்களை கண்டு ரசித்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சீன பேராசிரியர் ஜாங் யுவே வரைந்துள்ள ஜல்லிக்கட்டு ஓவியங்கள்… பத்திரிகை டாட் காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக வழங்குவதில் பெருமை கொள்கிறோம்….