2019-ம் ஆண்டுக்கான சிறந்த படம், நடிகர், இசையமைப்பாளர் என பல்வேறு குழுமங்களும் தங்களுடைய தேர்வை அறிவித்துவிட்டார்கள்.
இதில், ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கு எந்தவொரு விருதுமே கொடுக்கவில்லை.
இது தொடர்பாக ஷான் ரோல்டன் தனது ட்விட்டர் பதிவில், “இந்த வருடம் எந்த பெரிய விருதுகளுக்கும் சிறந்த இசைப் பிரிவில் ‘மெஹந்தி சர்க்கஸ்’ பரிந்துரை செய்யப்படாதது எனக்கு ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இசை ரசிகர்களுக்கு, விருதுக் குழுக்களை விட நல்ல ரசனை இருக்கிறது. 2020 அன்போடும், இசை ரசிகர்களின் ஆதரவோடும் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.