காத்மாண்டு: பாமாயில் இறக்குமதி தொடர்பாக இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகள் பற்றி ஆராய்ந்து வருவதாக இந்தோனேசியாவும், நேபாளமும் தெரிவித்துள்ளன.
தெற்காசியாவை பொறுத்தவரையில் 30 சதவீதம் பாமாயில் இறக்குமதியானது மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு வருகிறது. அதேபோல, நேபாளமும் பாமாயில் இறக்குமதியில் குறிப்பிடத்தக்க வினியோகஸ்தராக இருந்து வருகிறது.
அண்மையில் ஜம்முகாஷ்மீர் விவகாரம், குடியுரிமை சட்டம் ஆகியவற்றை இந்தோனேசியா, மலேசியா கடுமையாக கண்டித்தது. குறிப்பாக, மலேசியாவின் பிரதமர் மகாதிர் முகமது, தொடர்ந்து இந்த விவகாரத்தில் இந்தியாவை கண்டித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகளை இந்தியா விதித்தது. குறிப்பாக மலேசியா, நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு சில கட்டுப்பாடுகளை அதிரடியாக விதித்தது.
இது தொடர்பாக மத்திய வர்த்தக் துறை அமைச்சக அதிகாரிகள் கூறி இருப்பதாவது: இறக்குமதி கட்டுப்பாடு என்பது எந்த ஒரு நாட்டையும் குறி வைத்து செய்யப்படுவது அல்ல. அந்த பொருட்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடே தவிர அந்நாடுகள் மீது அல்ல என்று கூறிஉள்ளனர்.
முன்னதாக, இதுபற்றி பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவிஷ்குமார், பாமாயில் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது ராஜதந்திர நிலை. எங்களிடன் உணர்வுகளை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று நாங்கள் அவர்களிடம் கூறியுள்ளோம்.
துரதிர்ஷ்டவசமாக, அவர்களிடமிருந்து இதேபோன்ற உணர்வுகள் வெளி வருகின்றன. சில கட்டங்களில் இது சரியான செயல் அல்ல என்பதை அவர்கள் உணருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.