பெங்களூரு:

ர்நாடகாவில் பாஜக எம்.பி.க்கு காங்கிரஸ் கட்சியினர் வெங்காய மாலை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்வு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தசட்டம், தேசிய பதிவேடு சட்டம் போன்றவையும் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலையும் தினசரி உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சிக்மக்ளூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லேஜே தனது தொகுதிக்கு விஜயம் செய்தார். அதை அறிந்த காங்கிரஸ் கட்சியினர், திரளாக வந்து, அவருக்கு வெங்காயத் திலான மாலை அணிவிக்க முயன்றனர். இதனால் அவர் காருக்குள் ஏறிய நிலையிலும் அவருக்கு வெங்காய மாலை அணிவித்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாஜக எம்.பி.உடனே அவ்விடத்தை விட்டு சென்று விட்டார்.

பாஜக எம்.பி.க்கு வெங்காய மாலை அணிவிக்கும் வீடியோ….

[youtube-feed feed=1]