நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நடுகொம்பை ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக எம்.எல்.ஏவின் மகன் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91,975 பதவிகளை நிரப்புவதற்காக இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 27ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகளும், டிசம்பர் 30ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகின. இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், நடுகொம்பை ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சேந்தமங்கலம் அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரனின் மகன் யுவராஜ் தோல்வியை சந்தித்துள்ளார். யுவராஜை எதிர்த்து களமிறங்கிய அழகப்பன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
26 வயதான அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரனின் மகனான யுவராஜ் தோற்றிருப்பது, அம்மாவட்ட அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளது.