நெல்லை:

மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள  நெல்லை கண்ணன் 13ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சிஏஏக்கு எதிரான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நெல்லைக்கண்ணன்,  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, நேற்று  பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

அதையடுத்து நெல்லை கொண்டு வரப்பட்ட அவர், இன்று  நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.  அவரிடம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, வரும்  13ஆம் தேதி வரை நெல்லை  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.