சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகஅரசு வழங்கும் இலவச வேட்டி கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக லஞ்சஒழிப்பு துறை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு ஒரு கோடியே 25 லட்சம் இலவச வேட்டி -சேலை வழங்கப்பட உள்ளது. இதற்கான வாங்கப்பட் நூல்களில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தரம் குறைந்த நூல்களை அதிக விலைக்குக் கொள்முதல் செய்ததன் மூலம், 21 கோடியே 31 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கைத்தறித் துறை அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளது.