டெல்லி: உன்னாவ் பாலியல் வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் தம்மிடம் வேலைகேட்டு வந்த இளம்பெண்ணை பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் கடத்தி பாலியல் பலாத்காரம் என்று புகார் எழுந்தது.
அவர் கைது செய்யப்பட்டார். புகார் கொடுத்த இளம்பெண் காரில் செல்லும் விபத்தை சந்தித்தார். அவரது உறவினர்கள் 2 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்ட பெண்ணை கொல்லும் நோக்கில் நடத்தப்பட்டது என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, லக்னோ நீதிமன்றத்தில் இருந்து டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடர் விசாரணக்கு பிறகு, நேற்று தீர்ப்பை அளித்த நீதிமன்றம், செங்காரை குற்றவாளி என்று அறிவித்தது.
இந் நிலையில் இந்த வழக்கில் குல்தீப் செங்காருக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி டெல்லி மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்து உள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாயும், வழக்கு செலவுக்காக 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. பாலியல் வழக்கு தவிர மற்ற வழக்குகள் விசாரணை இன்னும் முடியவில்லை.