டெல்லி:
தலைநகரில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், மின்னஞ்சல்கள் வழியாக தேர்வுகளை நடத்த ஜேஎன்யு நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விடுதிகளின் பயன்பாடு மற்றும் சேவை கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக மாணவர்கள் பரீட்சை புறக்கணிப்பை அறிவித்து ஜே.என்.யூ) மாணவர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், குறிப்பிட்ட காலத்தில் தேர்வுகளை நடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, மாற்று முறையில் தேர்வுகளை நடத்த பல்கலைக் கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நேற்று (16-12-2019) நடைபெற்ற பல்கலைக்கழக நிர்வாக்குழு கூட்டத்தில் மாணவர்களின் தேர்வு குறித்து ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஜே.என்.யூ மாணவர்களின் கல்வி நலனுக்காக, எம்ஃபில் / பி.எச்.டி மற்றும் எம்.ஏ திட்டத்திற்கான இறுதி செமஸ்டர் தேர்வில் மாற்று முறையில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இதன் காரணமாக, திட்டமிடப்பட்டபடி செமஸ்டர் தேர்வுகளை நடத்த ஜே.என்.யூ நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக ஜேஎன்யு நிர்வாகம் தரபிப்ல, அனைத்து மையத் தலைவர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக, ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் (எஸ்ஐஎஸ்) டீன் அஸ்வினி கே மொஹாபத்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் “அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு” இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி வாட்ஸ்அப் மற்றும் இமெயில் மூலம் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கான வினாத்தாள்கள் மாணவர்களுக்கு அவர்களின் பாடநெறி ஆசிரியர்களால் வாட்ஸ்அப் மற்றும் இமெயில் மூலம் அனுப்பப்படும், என்றும், அதற்கு “மாணவர்கள் பதில் ஸ்கிரிப்ட்JNU exகளை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கையால் எழுதப்பட்ட ஸ்கிரிப்டுகளின் படங்கள் மூலமாகவோ வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் பாட ஆசிரியர்களிடமோ சமர்ப்பிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.