டெல்லி:

த்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெறியாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் 10 ரவுடிகளை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகமான ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது,  பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில் ஆா்ப்பாட்டக்காரா்கள், நான்கு பொதுப் பேருந்துகள் மற்றும் இரண்டு போலீஸ் வாகனங்களை   தீ வைத்து எரித்தனா்.

இதனால் காவல்துறையினர் வன்முறைக் கும்பலைக் கலைக்க தடியடி மற்றும் கண்ணீா்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும், மாணவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில் மாணவா்கள், போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் உள்பட சுமாா் 60 பேர் காயமடைந்த னா். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வன்முறை தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்து வந்தனர். அதையடுத்து, குற்றப் பின்னணி கொண்ட 10 ரவுடிகளை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வன்முறை தொடர்பாக மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.