ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்கு தலில் இரண்டு இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள  ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பேனி எல்லைக்கோடு பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென பீரங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தினார். எதிர்பாராத நிலையில் நடைபெற்ற இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் காஷ்மீரின் பந்திபோரா மாவட்ட எல்லைக்கோடு பகுதியில் உள்ள இந்திய நிலை கள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில்  ஒரு இந்திய வீரர் வீரமரணம் அடைந்த தாகவும் ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதையடுத்து, அந்த பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.  எல்லையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.