டெல்லி: தகவல் ஆணையர்களை 3 மாதத்துக்குள் நியமிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையத்துக்கு, ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதன்படி ஆணையர்கள் நியமிக்கப்படவில்லை.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, பிஆர் கவாய், சூர்யா கண்ட் ஆகியோர் முன்னிலையில் வந்தது. அப்போது உத்தரவிட்ட தலைமை நீதிபதி பாப்டே, 3 மாதங்களுக்குள் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார்.
மேலும், மத்திய தகவல் ஆணையர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை நியமித்து, அவர்களது பெயர்களை இணையத்தில் வெளியிட வேண்டும். 2 வாரங்களுக்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.