டெல்லி:
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்குஎதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவின் முக்கிய பகுதியான,டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே பிரியங்கா வதேரா சாலையில் அமர்ந்து போராட்டம் போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் சில காங்கிரசாரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துளளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா, இன்று மாலை திடீரென டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலரும் பங்கேற்றனர்.
இதனால் தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டது.