ஜார்க்கண்ட்
வடகிழக்கு மாநில மக்கள் நடத்தும் குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்டம் காங்கிரசால் நடத்தப்படுவதாக மோடி குறை கூறி உள்ளார்.
மத்திய அரசு இயற்றி உள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தின் படி பாகிஸ்தான், வங்கதேசம், மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து குடியேறி உள்ள இஸ்லாமியர் அல்லாதோருக்குக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ரெயில் எரிப்பு உள்ளிட்ட பல வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “வடகிழக்கு மாநில மக்கள் வன்முறையை விரும்பாதவர்கள். ஆனால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்ஹ்டு போராட்டம் நடத்தி வன்முறையைத் தூண்டுகின்றனர். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நிலைமையை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பிறகு இந்த மோடி மீதான மக்களின் நம்பிக்கை வலுவடைந்துள்ளது. இதை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதன் மூலம் இந்த மசோதா 1000% சரியானது என அவர்கள் புரிந்துக் கொண்டுள்ளனர். போராட்டம் நடத்தி பொதுச் சொத்துக்களைத் தீயிட்டு கொளுத்துபவர்களைத் தொலைக்காட்சியில் நீங்கள் காணலாம். அவர்கள் உடையில் இருந்தே அவர்களின் அடையாளம் தெரிய வரும்” எனக் கூறி உள்ளார்.