புதுடெல்லி: தொலைதூர எல்லைப் பகுதிகளிலும். மலைப் பிரதேசங்களிலும் கடுமையான சூழலில் பணிபுரியும் பாதுகாப்புப் படையினர், தங்களுக்கு ஏற்ற திருமண வரனைத் தேர்வுசெய்யும் வசதியை ஐடிபிபி எனப்படும் இந்தோ-திபெத் எல்லைப் போலீஸ் பிரிவு அறிமுகம் செய்துள்ளது.
ஐடிபிபி எனப்படும் துணை ராணுவப் படைகளில் ஒன்றாகும். இதில் கிட்டத்தட்ட 90 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். குறிப்பாக, சீனாவுடனான எல்லைப் பகுதிகளில் இவர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்தப் படையில் கணவன் – மனைவி பணியாற்ற வாய்ப்பளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தவகையில் இந்தப் படையில் பணியாற்றும் இணைகளின் எண்ணிக்கை மட்டும் 333. கணவன் – மனைவி இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், திருமணமாகாதோர், விவகாரத்தானோர் மற்றும் இணையை இழந்தோர் ஆகியோர் தங்களுக்கானப் பொருத்தமான வரன்களைத் தேடிக்கொள்ளும் வசதியை ஐடிபிபி வழங்குகிறது.
இதன்மூலம் விருப்பமுள்ளோர் ஐடிபிபி இ9ணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம். கடந்த 9ம் தேதி முதல் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டது.