டெல்லி: 6 ஆண்டுகளுக்கு முன்பே மக்களை மோடி தவறாக வழிநடத்தி இருக்கிறார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

டெல்லியில் பாரத் பச்சாவ் என்ற கோஷத்துடன் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: 6 ஆண்டுகளுக்கு முன்னால் மோடி நிறைய வாக்குறுதிகளை அளித்தார். இப்போது அந்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை என்று உறுதியாகி இருக்கிறது.

அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதன் மூலம் மோடி மக்களை தவறாக வழிநடத்தி உள்ளார். விவசாயிகளுக்கு இரட்டை வருமானம், அதிக வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, 2024ம் ஆண்டு பொருளாதாரம் 5 ட்ரில்லியன்களாக உயரும் என்று கூறினார்.

காங்கிரசையும், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் கரங்களை வலுப்படுத்துவது நமது கடமையாகும். அது உங்கள் பொறுப்பு. உங்களின் உத்வேகம் நாட்டை ஒரு திசைக்கு அழைத்துச் செல்ல உதவியாக இருக்கும் என்று பேசினார்.