
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் திரில்லர் பேமிலி டிராமா ‘தம்பி’.
இப்படத்தில் ஜோதிகா அக்காவாகவும், கார்த்தி தம்பியாகவும் நடிக்கிறார். இவர்களது அப்பாவாக சத்யராஜ் நடிக்க, அம்மாவாக சீதா நடித்திருக்கிறார்.கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார்.
கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை எஸ்.டி.சி (SDC) பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் அஸ்வந்த் உடன் தான் நடித்த காட்சிகளின் ஒரு சிறிய வீடியோவைப் பகிர்ந்த நடிகர் கார்த்தி, அஸ்வத்துடன் நடித்த காட்சிகளை தான் மிகவும் ரசித்ததாகவும், அவரை ஒரு இயற்கையான நடிகர் என்றும் தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel