ம்மு

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசால் விதி எண்370 ரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.  அத்துடன் இந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளின் போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  மாநிலம் எங்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  மொபைல் மற்றும் இணையச் சேவைகள் முடக்கப்பட்டன.   அத்துடன் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட பலர் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று அதிகாரிகள் முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.  ஃபரூக் அப்துல்லா சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளவர் ஆவார்.  அத்துடன் அவர் இருதய நோய் காரணமாக பேஸ் மேக்கர் கருவியைப் பொருத்திக் கொண்டவர்.