கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படத்தை YNOT ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது .
ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஒரேகட்டமாக லண்டனில் படமாக்க வேண்டிய காட்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு.
தற்போது மீண்டும் இந்தியக் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்று (டிசம்பர் 11) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் படப்பிடிப்பு டிசம்பர் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜனவரியில் 3 நாட்கள் மட்டும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அத்துடன் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்துவிடும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.