
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் கவுதம் மேனன் குயின் என்கிற பெயரில் வெப் தொடராக எடுத்து வருகிறார்.
இந்த தொடரை வெளியிட தடை கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
குயின் தொடர் வரும் 14ம் தேதி எம்.எக்ஸ். பிளேயரில் வெளியாக உள்ள நிலையில் குயின் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறே இல்லை என்று கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
அனிதா சிவகுமரன் எழுதிய குயின் புத்தகத்தை தழுவி தன் தொடர் எடுக்கப்பட்டுள்ளது என்கிறார் கவுதம்.
Patrikai.com official YouTube Channel