
தனது பல நாள் கனவு கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, அவரது மகன் ஆரவ் ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் , ஜெயராம் , அஸ்வின் ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது
ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு கலை இயக்குநராக தோட்டாதரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . இது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உருவாக உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் பட்ஜெட் ரூ.800 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து 12 பாடல்கள் எழுதுகிறார்.
இந்நிலையில், முதற்கட்டப் படப்பிடிப்புக்காக ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். இன்று (டிசம்பர் 11) அல்லது நாளை படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.
[youtube-feed feed=1]