சென்னை:
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விஜயதரணி எம்.எல்.ஏ. நீக்கப்பட்டுள்ளார். புதிய மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஜான்சிராணி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.பொன்னம்மாளின் பேத்தி ஆவார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட விஜயதரணி எம்.எல்.ஏ. காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது குற்றம் சாட்டினார். “இளங்கோவன் தலைவர் பதவியில் இருக்கும் வரை காங்கிரஸ் வெற்றி பெறாது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்சி மேலிடம், என் மீது நடவடிக்கை எடுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்று அவர் கூறினார்.
இதுபற்றி இளங்கோவனிடம் கேட்ட போது அவர், “நடந்தது நடந்ததாக இருக்கட்டும். விஜயதரணியின் கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் சட்டசபை காங்கிரஸ் கொறடாவாக நீடிப்பார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜான்சிராணி மூத்த காங்கிரஸ் நிர்வாகி மறைந்த ஏ.எஸ்.பொன்னம்மாளின் பேத்தி. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.
அவருக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி முழு ஒத்துழைப்பு அளிக்கும்” என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.