டெல்லி:

சுகாதாரத் திட்டங்களுக்காக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.800 கோடி நிதியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்து உள்ளதாக அரசு செய்தித் தொடா்பாளா்  தெரிவித்து உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அங்கு வளர்ச்சிப் பணிகளை மத்தியஅரசு முடுக்கி உள்ளது. இந்த நிலையில்,  முக்கிய சுகாதார திட்டங்களுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட ரூ .900 கோடியில் ரூ .836.64 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த அதிகாரி,  பிரதமரின் அபிவிருத்தித் தொகுப்பின் (பிஎம்டிபி) கீழ் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு சுகாதார திட்டங்களில், 48 திட்டங்கள் நிறைவடைந்து இருப்பதாக, ஸ்ரீநகரில் நிதி ஆணையா், சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி அடல் டல்லூ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும்,  மீதமுள்ள 96 திட்டங்களையும் அடுத்த 2020-21-ஆம் நிதியாண்டிற்குள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த திட்டங்கள் அனைத்தையும் நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்குமாறு பணிகளை மேற்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு நிதி ஆணையா் உத்தரவிட்டுள்sதாக செய்தித் தொடா்பாளா் கூறி உள்ளார்.