டில்லி
நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் தெரிவித்த முக்கிய விவரங்களை இங்கு காண்போம்.
இந்தியப் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருவதாகப் பல பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மத்திய பாஜக அரசு அதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதே வேளையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க நிதி அமைச்சர் வட்டிக் குறைப்பு உள்ளிட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அந்த சந்திப்பில் அவர் தெரிவித்த முக்கிய விவரங்கள் பின் வருமாறு
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் உள்ள 53.2% அரசுப்பங்கை முழுவதுமாக தனியாருக்கு விற்கப்பட உள்ளது. இதில் அந்நிறுவனத்தின் அசாம் மாநிலம் நுமாலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் பங்குகள் கிடையாது.
அரசின் கொள்கை ஒப்புதலின்படி அரசின் பங்கான ஷிப்பிங் கார்ப்பரேஷனின் 63.75%, கண்டயின்ர் கார்பரேஷன் நிறுவனத்தின் 30.8% மற்றும் 10% வடகிழக்கு மின் உற்பத்தி கழக பங்குகள் விற்கப்பட உள்ளது. இந்த நிறுவனங்களின் நிர்வாகம் இந்த பங்குகளை வாங்குபவரிடம் அளிக்கப்படும்.
இன்னும் இரு வருடங்களுக்கு ஸ்பெக்டிரம் பயன்பாட்டுக் கட்டண நிலுவைத் தொகைகள் வசூலை நிறுத்தி வைக்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய நெடுங்காலைத்துறை சாலைகளில் ஒரு வருடத்துக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்த சாலைகளுக்கான கட்டணக் காலம் 30 வருடங்களில் இருந்து 15 வருடங்களில் முதல் 30 வருடங்கள் வரை என குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிதிச்சேவை நிறுவனங்களின் நடவடிக்கைகளைச் சீரமைக்க ஒரு புதிய அமைப்பு ஏற்ப்டுட்தப்படும். இதற்காக எட்டு அமைப்புகளை ஒரே ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்படும். இந்த அமைப்புகளில் செபி, ரிசர்வ் வங்கி உள்ளிட்டவைகள் அடங்கும்.
சுமார் 1.2 லட்சம் டன் வெங்காய இறக்குமதிக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
முன்பு அறிவிக்கப்பட்ட கார்பரேட் வரி விகிதக் குறைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.