டெல்லி:
கடந்த 2017 ஆம் ஆண்டு, வடகொரியாவில் நடத்தப்பட்ட அணுசக்தி சோதனை குறித்து இஸ்ரோ குழு நடத்திய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனை, ஹிரோசிமா வில் நடைபெற்ற அணுகுண்டு தாக்குதலைவிட பல மடங்கு அதிகம் என்றும் தெரிவித்து உள்ளது.
உலக நாடுகளை தனது அணுஆயுத சோதனை மூலம் பயமுறுத்தி வருகிறார் வடகொரியா அதிபர் கிம் ஜாங். கடந்த 2017ம் ஆண்டு உலகநாடுகளை அச்சுறுத்தும் வகையில், அணுகுண்டு சோதனை நடத்தி, தனது அண்டை நாடுகளான அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சவால் விடுத்தது.
இதன் காரணமாக, வடகொரியா மீது சர்வதேச பொருளாதார தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், வடகொரியாவில் நடத்தப்பட்ட அணுசக்தி சோதனை குறித்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஆய்வு நடத்தி வருகின்றன. இந்தியா தரப்பில் இஸ்ரோ தரப்பில் இருந்து ஸ்ரீஜித், ரித்தேஷ் அகர்வால் மற்றும் ஏ.எஸ்.ராஜாவாட் ஆகிய 3 விஞ்ஞானிகள் கொண்ட குழுவினர், வடகொரியா அணுகுண்டு சோதனை குறித்து ஆய்வு நடத்தினர். இந்த குழுவினர் தாக்கல் செய்த ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.
அதன்படி, வடகொரியா நடத்திய அணுசக்தி சோதனை மிகவும் சக்தி வாய்ந்தது என்பதுடன், இந்த சோதனையின் போது, சுமார் 245 முதல் 271 கிலோ டன் எடை கொண்டது வெடிகுண்டுகள் சோதனை செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.
இந்த அணுகுண்டுகளின் தாக்கம், 1945ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் ஹீரோசிமா மீது வீசப்பட்டதை விட 17 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது என்று தெரிவித்து உள்ளது.
மேலும், இந்த அணுகுண்டு சோதனையானது, வடகொரியாவில் உள்ள மவுண்ட் மண்டபத்திற்கு கீழ் 542 மீட்டர் ஆழத்தில் நடத்தப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும், சோதனை நடத்தப்பட்ட இடத்தில் உள்ள மலை சற்று நகர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளது.
அதேவேளையில், இந்த அணுகுண்டு சோதனை காரணமாக, அதிர்ஷ்டவசமாக நிலநடுக்கம் ஏதும் வரவில்லை என்றும் அதிர்ச்சி தெரிவித்துஉள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் அறிக்கை, உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.