டெல்லி:

டுத்த ஆண்டு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இந்த கணக்கெடுப் புக்காக பிரத்யேக மொபைல் செயலி உருவாக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (18ந்தேதி) முதல்  தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்றைய கூட்டத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் , “வரும் 2021 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 16 இந்திய மொழிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இரண்டு கட்டமாக நடத்தப்பட உள்ள பணிகளுக்காக 8,754 கோடி ரூபாய் ஒதுக்கும்படி மத்திய அரசுக்கு செலவின நிதிக்குழு பரிந்துரை செய்து இருப்பதாக தெரிவித்து உள்ளது.

மேலும், இந்த  மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக தனி மொபைல் செயலி உருவாக்கப்படும். இதை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் தங்கள் விவரங்களை சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்படும்”

இவ்வாறு அவர் கூறினார்.